666- அந்திக் கிறிஸ்து யார்?

0 comments

தன்னைத் தீர்க்கத்தரிசி என்று அழைத்துக் கொள்ளும் ஜீன் டிக்சன் (Jeane Dixon) என்னும் அமெரிக்கப் பெண்மணி 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி இரவு தன் ஹொட்டல் அறையிலிருந்து ஜன்னலின் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டாளாம். அத்தரிசனத்தில் ஒரு கரிய நிற உருவம் ஒரு கரிய நிற குழந்தையை மத்திய ஆசியாவில் உள்ள ஒரு குடியானவப் பெண்ணிடம் ஒப்படைத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவள் அத்தரிசனத்தின் விளக்கத்தை அறிய தன் உதவியாளர்களைக் கலந்தாலோசிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறினர். கடைசியில் ஒரு உதவியாளன் பரிசுத்த வேதாகமத்தின் வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆராய்ந்து விட்டு இத்தரிசனம் "அந்திக் கிறிஸ்துவின்" பிறப்பை எச்சரிக்கிறது என்ற விளக்கத்தைக் கொடுத்தான். இதன் அடிப்படையில் ஜீன் டிக்சன் 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு அந்திக்கிறிஸ்து உலகில் பிறந்து விட்டான் என்ற தீர்க்கதரிசன அறிக்கையை வெளியிட்டாள். இத் தீர்க்கதரிசன அறிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜீன் டிசனுடைய அனேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போயிருந்தாலும் அவள் கூறின சில தீர்க்க தரிசனங்கள் அப்படியே நிறைவேறியிருந்தன. உதாரணமாய் ராபர்ட் F.கென்னடி, ஜான் F. கென்னடி ஆகிய இருவரும் எங்கு எப்போது மரிப்பார்கள் என்று அவள் கூறினாள். அது அப்படியே நடந்தது. அந்திக்கிறிஸ்துவை குறித்து ஜீன்டிக்சன் அறிவித்த தீர்க்கதரிசனம் அநேக சினிமா படத்தயாளிப்பாளர்களுக்கு விறு விறுப்பான "Subject" ஆக அமைந்தது. இதன் அடிப்படையில் ரோஸ் மேரி பேபி (Rose Mary Baby), ஹோலோகாஸ்ட-2000 (Holocaust-2000), அப்போகாலிப்ஸ் (Apocalypse), ஓமன் I, ஓமன் II (Ommen I, Ommen II) என்ற திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. முக்கியமாக ஓமன் I-ம், II-ம் அந்திக்கிறிஸ்துவைக் குறித்த எச்சரிப்பை உலக மக்களுக்கு கொடுக்க எடுக்கபட்டதாக அதன் தயாரிப்பாளர் "பாப் மங்கர்" (Bob Munger) தெரிவித்துள்ளார். வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆதாரமாக திரையில் காண்பித்து இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படங்கள் உலகமெங்கும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டன.

இவ்வாறு திரைப்படங்கள் மூலம் பிரபலமாக்கப்பட்ட அந்திக்கிறிஸ்துவைக் குறித்து தெளிவாய் எச்சரிக்கிற புத்தகம் பரிசுத்த வேதாகமமே. இந்த அந்திக்கிறிஸ்து உலகை ஆளும்போது உலகில் உண்டாகப்போகிற மகா உபத்திரவ காலத்திற்கு காத்துக்கொள்ளக்கூடிய வழியையும் பரிசுத்த வேதாகமம்தான் கூறுகிறது. இப்படிப்பட்ட ஒரு உலக சர்வாதிகாரி உலகை ஆளக்கூடிய சூழ்நிலைகள் இப்போது உலகில் உருவாகிக்கொண்டுள்ளன. வெகு சீக்கிரத்தில் அது சம்பவிக்கவும் போகிறது.

இப்படிப் பட்ட ஒரு உலக அரசு (World Govt.) ஏற்படக்கூடிய அவசியம் உலக அரசியலில் ஏற்பட்டுள்ளது. இப்போது உலகில் உள்ள கோர்ட் (World Court), உலக பாங்கு (World Bank) இவையெல்லாம் வரப்போகிற உலக அரசின் முன்னோடிகள். இதல்லாமல் முப்பதுக்கும் மேற்பட்ட உலக அளவில் ஆன அமைப்புகள் இன்று உலகில் செயல்பட்டு வருகின்றன, இப்படிப்பட்ட ஒரு உலக அரசு ஏற்பட வேண்டும் என்ற ஒரு மசோதா நமது பாராளுமன்றத்தில் Dr.H.V.காமத் அவர்களால் கொண்டு வரப்பட்டதாக 8-5-78 ஹிந்து பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. உருவாகப்போகிற உலக அரசு வரப்போகிற அந்திக் கிறிஸ்துவின் ஆட்சிக்கு வழி வகுக்கும்.

அந்திகிறிஸ்துவை குறித்த திரைப்படங்களுக்கு ஆதாரமான தீர்க்கதரிசனத்தை வெளியிட்ட "ஜீன் டிக்சன்", தான் பரிசுத்த ஆவியினால் தான் தீர்க்கதரிசனம் சொல்வதாக தெரிவித்தாலும் உண்மையில் அவ்வாறு இல்லை. சுருங்கச் சொன்னால் அவள் ஒரு பிசாசினுடைய "மீடியம்" கிறிஸ்தவ விசுவாசிகள் ஜீன் டிக்சனுடைய தீர்க்கதரிசனத்துக்காய் காத்திருக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனத்திற்காய் விசுவாசிகள் காத்திருக்கவும் கூடாது என்று வேதம் உபாகமம் பதின்மூன்றாம் அதிகாரம் முதல் மூன்று வசனங்களில் தெரிவிக்கிறது. அப்படியென்றால் அந்திக்கிறிஸ்துவைக் குறித்து வேதம் என்ன தெரிவிக்கிறது என்று இனி பார்ப்போம்.

-தொடரும்.

டாக்டர்.S.ஜஸ்டின்பிரபாகரன் அவர்களின் "666- அந்திக் கிறிஸ்து யார்?" என்ற புத்தகத்திலிருந்து.

இனம் கண்டு கொள்ளுங்கள்! கள்ளத்தீர்க்கதரிசிகளை!

0 comments

எழுதவேண்டியதன் கட்டாயம்

அண்மை நாட்களில் நான் பல பொய்யான தீர்கதரிசிகளையும், அவர்கள் சொல்லும் வேதாகமத்திற்கு புறம்பான தீர்க்கதரிசனங்களையும் நேரிலும்,Tv / Radioலும் பார்க்கவும், கேட்கவும் நேர்ந்தது. இது எனக்குள் வெறுப்பையும், கசப்பையும், ஏற்படுத்தியது. இவர்களுடைய தவறான போதனைகளையும், தீர்க்கதரிசனங்களையும் நம்பும் மனிதர்களை பார்த்தபோது மிகவும் கவலையும் ஆத்திரமும் வந்தது.

அந்த சமயம் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன:

  • மக்களுக்கு வேதாகமத்தைப்பற்றிய அறிவே இல்லையா? 
  • அல்லது ஜனங்கள் வேதமே வாசிப்பது இல்லையா?
  • அல்லது பொய்க்கும் உண்மைக்கும் வித்தியாசம் தெரியதபடிக்கு அனேகருடைய கண்கள் மூடியிருக்கின்றதா?  

பிற்பாடு நான் வேதாகமத்தையும் பல ஆவிக்குரிய மனிதர்கள் எழுதிய புஸ்தகங்களையும்  வாசிக்கும் போது அதற்கான விடையும் கிடைத்தது.

இயேசு கிறிஸ்துவின் போதனையைவிட அனேகருக்கு பொய்பேசுகின்ற தீர்க்கதரிசிகளைத்தான் பிடிக்கும் என்பதனை புரிந்து கொண்டேன்.
இயேசு சொன்னார்:
யோவான் 8: 43 - 44  என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
 
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

இன்று அனேகர் வேதாகமத்தை ஆராய்ந்து வாசிப்பதில்லை. வேதாகமம் தெரியாமல் ஒருவன் சொல்லும் தீர்க்கதரிசனம் வேதாகமத்துக்கு புறம்பானதா? இல்லையா? என்று எப்படி அறிந்து கொள்ள முடியும் ?????

வேதாகமத்தை வாசிக்க வேண்டும்

ஏசாயா 8: 20  வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.

மக்களே ஆவியை சோதித்தறியுங்கள்

1 யோவான் 4: 1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
ஜனங்களை தேவன் முன்னெச்சரிக்கை செய்கின்றார்!  தேவன் எச்சரிக்கை செய்தும் அறிவில்லாமல் அழிந்து போக வேண்டாம் !!!

மக்களே எச்சரிக்கையாயிருங்கள்!

மத்தேயு 7: 15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

1 தீமோத்தேயு 4: 1. ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

2 பேதுரு 1: 1 - 2  கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

அப்போஸ்தலர் 20:  29 - 30  நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

தேவன் பொய் தீர்க்கதரிசிகளை எச்சரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கான நியாயத்தீர்ப்பையும் அறிவித்திருக்கின்றார். இந்த நியாயத்தீர்ப்பை அறிந்தென்னவோ அவர்கள் இன்னமும் அக்கிரமத்துக்கு மேல் அக்கிரமம் செய்கின்றார்கள்! <அக்கிரமம் செய்கிறவன் இன்னும் அக்கிரமம் செய்யட்டும்>

எச்சரிக்கை! பொய் தீர்க்கதரிசிகளுக்கு!

மத்தேயு 7: 22 - 23 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
  
உபாகமம் 18: 20-22 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 
  
வெளி 18, 19  இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 

எசேக்கியேல் 13

1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2. மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

3. கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!

4. இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

5. நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

6. கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.

7. நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

8. ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகியஆண்டவர் சொல்லுகிறார்.

9. அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.

10. சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்;

எரேமியா 23

9. தீர்க்கதரிசிகளினிமித்தம் என் இருதயம் என் உள்ளத்திலே நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தர் நிமித்தமும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும் நான் வெறித்திருக்கிற மனுஷனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன்.
16. உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
11. தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள், என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17. அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்றுகர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.
21. அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
25. சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.
31. இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.

26. எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்திலே ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.

Thursday, 30 June 2011

666- அந்திக் கிறிஸ்து யார்?

0comments

Tuesday, 3 May 2011